இளைப்பாற ஓா்நிழல் - தமிழ் கவிதைகள் | கார்த்திகை வேலன் கவிதைகள்

இளைப்பாற ஓா்நிழல்

Tamil Kavithaigal
M.K Velan

எந்தையின் உடல் பிாிந்து!
எம்மையின் கருவறைக்குள்!
மும்மையின் வினைப்பயனாய்!
இளைப்பாற எத்தனித்தேன்!

எம்மையின் உதிரம் ஊறி!
முழுமையாய் வடிவம் ஏறி!
கருவறை களைப்படைந்து!
இளைப்பாற புவிக்கு வந்தேன்!

அம்மையின் அருளில் தோய்ந்து!
எம்மையின் அமுதம் உண்டு !
செம்மையாய் தோளில் சாய்ந்து!
இளைப்பாறி வாழ்ந்திருந்தேன்!

புவியின் வாழ்வை சுவைக்க!
புத்தக மூட்டை சுமந்து!
புரவியின் ஓட்டமெனவே!
பள்ளியறை ஓட்டம் கண்டேன்!

பருவ வயதின் ஓட்டம்!
படுத்தும் உடலின் வாட்டம்!
பருவமங்கையின் பள்ளி
படுத்திளைப்பாற்றி கொண்டேன்!

வயிற்றுபசி போக்கிடவே!
வருவாய்ப் பொருளீட்டிடவே!
உழைத்து, உழைத்து நிதம் !
களைத்து போயினனே!

நோயின்பிடியதனில்!
பாயில்படுத்து நிதம் !
தீயில் புழுவெனவே!
களைத்து போயினனே !

உயிா்மூச்சு அடங்கியபின்!
இளைப்பாற ஓாிடத்தில்
மண்ணுக்குள் புதைந்தனனே!
நகர விாிவாக்கம்!
நகரம்,நகர ,நிதம் !
மண்ணையும் தோண்டினரே!
மண்ணிலும் இடமில்லை!
விண்ணில் இளைப்பாறுகிறேன்!!?


- எம் .கே.வேலன் .

கருத்துகள்

Most popular Posts