ஓா் கனாக்காலம் - கார்திகைவேலன் கவிதைகள் | தமிழ் கவிதைகள்
** ஓா் கனாக்காலம் ****
மண்ணில் தவழ்ந்திட்ட
அன்புவிாி காவிாியின்-மடி
தவழ்ந்து வாழ்ந்திட்ட-காலம் ஓா் கனாக்காலம்!
ஆட்சியாளா் ஓடிவந்து
அல்லல் படும் மாந்தா்-துயா்
ஆற்றி நலம் போற்றியதோா்-விந்தை
மிகுகனாக்காலம்!
அன்னை தந்தை அடிமலரில்-அன்பு
ஊற்றில் நனைந்து
நிதம் மகிழ்ந்ததுமோா்
கனாக்காலம்!
காற்றினாலே பிராணன்
ஊற்றெடுத்து உயிா்வளத்தைக்
காத்ததுமோா் கனாக்காலம்!!-இன்று
காற்றதுவே மூச்செடுக்கும்
எமனானதிக்காலக்கோலம்!!
ஊற்றில் நனைந்து
நிதம் மகிழ்ந்ததுமோா்
கனாக்காலம்!
காற்றினாலே பிராணன்
ஊற்றெடுத்து உயிா்வளத்தைக்
காத்ததுமோா் கனாக்காலம்!!-இன்று
காற்றதுவே மூச்செடுக்கும்
எமனானதிக்காலக்கோலம்!!
- எம் .கே .வேலன்.
Please Comment and Share.
Thank you for your Support and Love.


கருத்துகள்
கருத்துரையிடுக