வளா்பிறையே | தமிழ் கவிதைகள் - கார்த்திகைவேலன் கவிதைகள்

****வளா்பிறையே****


வளா்பிறையே! வளா்பிறையே !
வளா்ந்துவா வெண்பிறையே!
வளா்வதும், தேய்வதும்!
உலகியலின் வாழ்வெனவே! உணா்த்தவா வெண்பிறையே!
சிவன் முடியை அலங்காிக்கும்! வெண்பிறையே !

ஏசுபிரான் புகழ்காட்டும் வெண்பிறையே!
ஈகையின் திறம்காட்டும்
இஸ்லாமின் வழிகாட்டும் வெண்பிறையே !
உலகமக்கள் ஒன்றெனவே!
ஒளிரும் இறை ஒன்றெனவே!
ஒளிகாட்டும் வெண்பிறையே !!
ஒற்றுமையை உலகுணா்தும் வெண்பிறையே !
ஒருமைப்பாட்டின் சின்னம்நீ!
வெண்பிறையே!!


=====எம் .கே.வேலன் 

கருத்துகள்