எசப்பாட்டு - கார்திகைவேலன் கவிதைகள் | தமிழ் கவிதைகள்
எசப்பாட்டு - கார்திகைவேலன் கவிதைகள் | தமிழ் கவிதைகள்
காதலி:
அத்த பெத்த ஆச ராசா -நல்ல
வித்த கத்த நேச வாசா-ஓந்
நெஞ்ச கொஞ்சந் தொறந்து பாரு!
பூத்திருக்கும் இந்த ரோசா!
அத்த பெத்த ஆச ராசா -நல்ல
வித்த கத்த நேச வாசா-ஓந்
நெஞ்ச கொஞ்சந் தொறந்து பாரு!
பூத்திருக்கும் இந்த ரோசா!
காதலன்:
மாமன் பெத்த மஞ்ச ரோசா!
காமன் செஞ்ச தங்க ரோசா!
மச்சான் நெஞ்சில் பூந்த ரோசா!
மொத்த உசிரும் உனக்கே ரோசா
முத்த மாலைய வீசடி லேசா!
மாமன் பெத்த மஞ்ச ரோசா!
காமன் செஞ்ச தங்க ரோசா!
மச்சான் நெஞ்சில் பூந்த ரோசா!
மொத்த உசிரும் உனக்கே ரோசா
முத்த மாலைய வீசடி லேசா!
- எம் .கே.வேலன் .


கருத்துகள்
கருத்துரையிடுக